டெல்லி: ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பிரிக் எஸ்கே மிஸ்ரா மற்றும் அவரது குழுவினரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குடியரசுதலைவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
