ராஜகுடும்பத்தில் இனி இந்த உணவு பரிமாறக் கூடாது: தடை செய்து உத்தரவிட்ட மன்னர் சார்லஸ்


பிரித்தானிய ராஜகுடும்பத்தில் எந்த இல்லத்திலும் இனி foie gras உணவு சமைக்க வேண்டாம் என மன்னர் சார்லஸ் தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.

கிளாரன்ஸ் மாளிகையில்

குறித்த பிரஞ்சு உணவை பரிமாறுவது என்பது நெறிமுறையற்ற செயல் எனவும் மன்னர் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ராணியார் மறைவுக்கு முன்னர் வேல்ஸ் இளவரசராக பொறுப்பேற்றிருந்த காலகட்டத்திலும், தமது கிளாரன்ஸ் மாளிகையில் குறித்த உணவை சார்லஸ் தடை செய்திருந்தார்.

ராஜகுடும்பத்தில் இனி இந்த உணவு பரிமாறக் கூடாது: தடை செய்து உத்தரவிட்ட மன்னர் சார்லஸ் | Controversial Food Charles Bans Royal Residence

@PA wire

foie gras உணவு என்பது வாத்துகளுக்கு அவைகளுக்கான உணவை வலுக்கட்டாயமாக திணித்து, அதன் கல்லீரல் வீங்கச் செய்து, பின்னர் உரிய முறைப்படி சமைத்து உண்ணப்படுகிறது.

மன்னரின் இந்த அதிரடி முடிவுக்கு விலங்கு உரிமைகள் குழு ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், வேல்ஸ் இளவரசராக இருந்த போதும், தற்போது மன்னராக பொறுப்புக்கு வந்த பின்னரும் அவர் எடுத்துள்ள இந்த முடிவு பாராட்டுக்கு உரியது என தெரிவித்துள்ளனர்.

ராஜகுடும்பத்தில் இனி இந்த உணவு பரிமாறக் கூடாது: தடை செய்து உத்தரவிட்ட மன்னர் சார்லஸ் | Controversial Food Charles Bans Royal Residence

@getty

Peta அமைப்பு

foie gras உணவுக்காக வாத்தின் கல்லீரல் பத்து மடங்கு பெரிதாகும் வரையில் வலுக்கட்டாயமாக உணவைத் திணிப்பார்களாம்.
அதன் பின்னர் உரிய முறைப்படி சமைத்து ராஜகுடும்பத்து உறுப்பினர்களுக்கு பரிமாறப்படுமாம்.

மன்னரின் இந்த புதிய தடை உத்தரவானது Peta அமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மறைந்த ராணியார் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுத்திருந்தார் என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள Peta அமைப்பு, தற்போது மன்னர் சார்லஸ் தடை செய்திருப்பது உண்மையில் பாராட்டுதலுக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர்.

சார்லஸ் மன்னரின் இந்த தடை உத்தரவானது பால்மோரல் மாளிகை, சாண்ட்ரிங்ஹாம் கோட்டை, வின்ட்சர் மாளிகை, ஹில்ஸ்பரோ மாளிகை மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனையிலும் அமுலில் இருக்கும்.

இந்த உணவானது மிகவும் சர்ச்சைக்குரியது மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகள் அதன் இறக்குமதியை முற்றிலுமாக தடை செய்துள்ளன.
இருப்பினும் பிரான்ஸ் மற்றும் பிரஞ்சு உணவுப் பிரியர்களிடம் இந்த உணவானது மிகவும் பிரபலமாகவே உள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.