அதிமுகவை கழட்டிவிடும் பாமக.. வேற முடிவை எடுத்த அன்புமணி

திருவள்ளூரில் மாவட்ட

நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர்

ராமதாஸ் கலந்துரையாடினர். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனுப்புமணி கூறியதாவது, ‘சென்னையில் மழைநீர்வடிகால் பணிகள் இன்னும் சீராக முடிக்கப்படவில்லை. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தலா ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட 10 ஏரிகளை அரசு உருவாக்க வேண்டும். தமிழக அரசின் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.

ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமான மசோதாவை ஆளுநர் தாமதம் செய்யாமல் கையெழுத்திட்டு சட்டமாக்க வேண்டும். 55 ஆண்டு காலம் இரு திராவிட கட்சிகளும் ஆட்சி செய்தது போதும் என்றமனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் தமிழகத்தில் உறுதியாக ஆட்சிஅமைப்போம்.

அதை நோக்கிதான் எங்கள் அரசியல் பயணத்தை ‘பாமக 2.0’ மூலம் நடத்துகிறோம். அதிமுக ஒரு பக்கம் நான்காக பிரிந்து இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுஆகிவிட்டது. இன்னும் அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. ஆளுநரை முதல்வர் சந்தித்து, என்ன பிரச்சினை இருந்தாலும் அதை சுமுகமான முறையில் தீர்த்து, தமிழக நலன் கருதி இருவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் கொண்டு வருவது பாமகவின் கொள்கை முடிவு ஆனால் பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைத்து தவறானது. அதை பாமக ஏற்றுக்கொள்ளாது. அதற்கு பதிலாக திருப்போரூரில் உள்ள அரசு காலியிடங்களில் அமைக்கலாம்” என இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.