ஈராக், சிரியா மீது துருக்கி விமானப்படை தாக்குதல்: வீடியோவை வெளியிட்டு பதிலடி வழங்கப்பட்டதாக அறிவிப்பு



இஸ்தான்புல் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில்,  சிரியா மற்றும் ஈராக் உள்ள இலக்குகள் மீது துருக்கி விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

துருக்கி குண்டுவெடிப்பு

கடந்த நவம்பர் 13ம் திகதி இஸ்தான்புல்லின் பாதசாரிகளின் இஸ்டிக்லால் அவென்யூவில் திடீரென அதிர்ச்சியூட்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புல் மையப்பகுதியில் அரங்கேறிய பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் வரை உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ரோஜாப் பூவை கையில் வைத்துக்கொண்டு சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிய சிரிய பெண் அஹ்லாம் அல்பாஷிர் முக்கிய சந்தேக நபராக கைது செய்யப்பட்டார்.


பதிலடி தாக்குதல்

இஸ்தான்புல் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு குர்திஷ் அமைப்புகளே காரணம் என்று துருக்கி குற்றம்சாட்டியதுடன் தக்க பதிலடி சரியான நேரத்தில் வழங்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில், இரவு நேரத்தில் விமானப்படை விமானம் ஒன்று வானில் செலுத்தப்படும் புகைப்படத்தை வெளியிட்டு “பதில் கணக்கை தீர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது” என தெரிவித்து பதிலடி தாக்குதலை அறிவித்துள்ளது.

மேலும் துருக்கி மீது துரோகத் தாக்குதலை நடத்தியவர்கள் இதற்கு பொறுப்பு கூறுவார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புலில் 13ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட குர்திஷ் தொழிலாளர் கட்சியையும்,(Kurdistan Workers Party) சிரிய குர்திஷ் குழுவையும் துருக்கி குற்றம்சாட்டி இருந்தது.

ஆனால் அதற்கு குர்திஷ் போராளிகள் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
 துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், விமானப்படை விமானம் ஒன்று இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாதிகளின் மையங்களை அழிக்க துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
துருக்கிய படைகளின் இந்த பதிலடி தாக்குதல் ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் சில பகுதிகள் நடத்தப்பட்டுள்ளது.

பாதிப்புகள்

தாக்குதலின் விளைவுகள் குறித்து துருக்கி துல்லியமான தகவல்களை வெளியிடாத நிலையில், குர்திஷ் வீரர்கள் வழிநடத்தும் சிரிய பாதுகாப்பு படை வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்த தாக்குதல் வடகிழக்கு சிரிய நகரான Kobane மீது நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக அவற்றின் எண்ணிக்கை துல்லியமாக வெளியிடப்படாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.