நெல்லை: மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் உட்பட 30 பேரை டிச.2 வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சாலையில் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அவற்றை ஏலம் விடுவதற்காக அடைத்து வைத்திருந்தனர். மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் உள்ளிட்டோர் அடைத்து வைத்திருந்த மாடுகளை அவிழ்த்து விட்டனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் தயாசங்கர் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
