தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த திமுக இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆயிரக்கணக்கான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்ட நெரிசலில் விமான நிலையத்திலிருந்து சிலை மற்றும் மரங்கள் உடைந்து கீழே விழுந்தது திமுக தொண்டருக்கு காயமடைந்தனர்.
தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையம் வந்தடைந்தார். இவரை வரவேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் திமுகவினர் கூடினர். அப்போது காவல்துறை குறைபாட்டால் இளைஞர்களிடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மேலும், விமான நிலையத்தில் அலங்காரதிற்கு வைக்கப்பட்ட கருங்கற்களிலான 4 அடி கல் சிலை, பூந்தொட்டிகள் உடைந்தது. மேலும் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் கீழே கிடந்தது மக்கள் மிதித்து சென்றனர். இதனால் விமானத்தில் வந்த பயணிகள் இதனை பார்த்து முகம் சுளித்து கொண்டு கடந்து சென்றனர்.