திருமண அழைப்பால் வெடித்த சர்ச்சை: ராஜகுடும்பத்து உறுப்பினர் கர்ப்பிணி மனைவியுடன் துரத்தப்பட்ட பரிதாபம்


பிரித்தானியாவில் யர்மவுத் ஏர்ல் என அறியப்படும் வில்லியம் சீமோர் என்பவரே 2019ல் தமது கர்ப்பிணி மனைவியுடன் Ragley Hall Estate மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.

மாளிகையில் இருந்து வெளியேற்றம்

வில்லியம் சீமோர் தமது திருமணத்திற்காக நெருங்கிய உறவினரான Lady Carolyn Seymour என்பவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

திருமண அழைப்பால் வெடித்த சர்ச்சை: ராஜகுடும்பத்து உறுப்பினர் கர்ப்பிணி மனைவியுடன் துரத்தப்பட்ட பரிதாபம் | Royal Rift Earl Kicked Out With Pregnant Wife

Credit: Alamy

இதுவே வில்லியம் சீமோர் தாம் பிறந்து வளர்ந்த, எதிர்காலத்தில் தமக்கு சொந்தமாக வேண்டிய 85 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான Ragley Hall Estate மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட காரணமாக அமைந்துள்ளது.

திருமணத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அந்த நடவடிக்கை தம்மை அவமானப்படுத்தியதாக குறிப்பிட்டு லேடி கரோலின் சீமோர் வெறுப்பை கொட்டி பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

வில்லியம் சீமோர் அனுப்பியுள்ள கடிதத்தில் பல குறைகளை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என கூற என்ன உரிமை இருக்கிறது என்பது போன்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

திருமண அழைப்பால் வெடித்த சர்ச்சை: ராஜகுடும்பத்து உறுப்பினர் கர்ப்பிணி மனைவியுடன் துரத்தப்பட்ட பரிதாபம் | Royal Rift Earl Kicked Out With Pregnant Wife

Credit: St Maur

காதல் விவகாரத்தில் தொல்லை

லேடி கரோலின் சீமோர் அனுப்பிய கடிதம் குடும்பத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, தமது காதல் விவகாரத்தில் கடுமையான போக்கை முன்னெடுத்த பெற்றோர், பல தொல்லைகளையும் அளித்து வந்ததாக வில்லியம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமது மூன்று சகோதரர்களும் பல மாதங்கள் பேசாமலே இருந்துள்ளதாகவும் வில்லியம் சீமோர் நினைவுகூர்ந்துள்ளார்.
இந்த நிலையில், திருமணம் முடிந்து ஓராண்டுக்கு பின்னர் Ragley Hall Estate மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வில்லியம் கூறியுள்ளார்.

திருமண அழைப்பால் வெடித்த சர்ச்சை: ராஜகுடும்பத்து உறுப்பினர் கர்ப்பிணி மனைவியுடன் துரத்தப்பட்ட பரிதாபம் | Royal Rift Earl Kicked Out With Pregnant Wife

Credit: St Maur

அப்போது தமது காதல் மனைவி கவுண்டஸ் கெல்சி கர்ப்பிணியாக இருந்தார் எனவும், அந்த ஒரு கடிதம் காரணமாக தமது சகோதரர்களுடனான உறவு சிதைந்தது என்பதை வில்லியம் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது வில்லியம்- கெல்சி தம்பதி தங்களின் முன்னோர்கள் உருவாக்கியதும் குடும்ப தொழிலுமான மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டுமின்றி, தமக்கு உரிமையான Ragley Hall Estate மாளிகை ஒருநாள் தமக்கு சொந்தமாகும் என நம்புவதாகவும், அந்த நாள் மிக விரைவில் அமையும் என்றே காத்திருப்பதாகவும் வில்லியம் சீமோர் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.