காதலியை 6 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய நபர்; போட்டு தள்ளிய போலீஸ்.!

உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக்பூர் கிராமத்தில், கிணற்றுக்குள் பெண் சடலம் கிடப்பதாக உள்ளூர்வாசிகள் கடந்த 15ம் தேதி போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தலை இல்லாமல் அரை நிர்வாணத்தில் துண்டு துண்டுகளாக கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரித்து வந்தனர். இதையடுத்து அதே மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் யாதவ் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், பிரன்ஸ் யாதவ் மற்றும் கொலை செய்யப்பட்ட ஆராதனா என்ற 20 வயது பெண்ணும் முன்னாள் காதலர்கள் என்பது தெரியவந்தது. மேலும் ஆராதனா திடீரென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டார். ஆனாலும் திருமணத்திற்கு பின்னரும் தன்னுடன் பழகி வந்துள்ளதாக பிரின்ஸ் யாதவ் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் தன்னுடன் பழகி வந்தாலும், தன்னை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் பிரின்ஸ். இதனால் ஆராதனாவை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த நவம்பர் 9ஆம் தேதி அன்று ஆராதனாவை கோவிலுக்கு செல்லலாம் என்று பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சென்றதும் உறவினர் சர்வேசின் உதவியுடன் கோவிலுக்கு அருகே இருந்த கரும்பு தோட்டத்திற்குள் ஆராதனாவை தூக்கிச் சென்றிருக்கிறார்.

அங்கு ஆராதனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் உடலின் பாகங்களை 6 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்து கிணற்றில் வீசி இருக்கிறார். தலையை வேறொரு குளத்தில் வீசியதாக பிரின்ஸ் யாதவ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்ட பிரின்ஸ் யாதவவ்விடம் நாட்டு துப்பாக்கி, கூரிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் பின்னர் விசாரணைக்காக கொலை நடந்த இடத்திற்கு பிரின்சை அழைத்துச் சென்ற போது, போலீஸ் இடம் இருந்து தப்பிப்பதற்காக மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எடுத்து சுட்டு இருக்கிறார். பதிலுக்கு போலீசார்ரும் துப்பாக்கி சூடு நடத்தியதில் பிரின்ஸ்க்கு உயிரிழந்தார்.

இதையடுத்து ஆராதனாவை கொலை செய்ய உதவிய பிரின்ஸின் குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேரை ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் தனது காதலியை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.