சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழ்நாடு இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 420 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வட தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
