கடந்த 6 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளை குவித்த பாக். ராணுவ தளபதி குடும்பம்

இஸ்லாமாபாத்: கடந்த 6 ஆண்டு காலத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமர் ஜாவித் பாஜ்வாவின் குடும்பத்தார் கோடிக்கணக்கில் சொத்துகளைக் குவித்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஃபேக்ட் போக்கஸ் என்ற இதழில் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் அகமது நூரானி இதுதொடர்பாக ஆய்வு செய்து தகவல்கள், ஆதாரங்களுடன் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். ராணுவ தளபதி கமர் ஜாவித் பாஜ்வாவும், அவரது குடும்பத் தாரும் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் வாங்கிய பண்ணை வீடுகள், வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள், கோடிக்கணக்கான சொத்து விவரங்கள் போன்றவற்றை ஃபேக்ட் போக்கஸ் இதழில் அவர் வெளியிட்டுள்ளார்.

வெறும் 6 ஆண்டுகளில் அவர்கள் இந்த சொத்துகளை வாங்கியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நூரானி கூறியுள்ளதாவது: 6 ஆண்டுகளில் கமர் ஜாவித் பாஜ்வா, அவரது மனைவி ஆயிஷா அம்ஜத், மருமகள் மஹ்னூர் சபீர், மேலும் சில குடும்ப உறுப்பினர்கள் அதிக அளவில் சொத்துகளைக் குவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் வியாபாரம் தொடங்கி கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ளனர். வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குதல், முதலீடுகளை வெளிநாடுகளுக்கு அனுப்புதல், வர்த்தக வளாகங்கள் வாங்குதல், வர்த்தகமனைகளை வாங்குதல், இஸ்லாமாபாத், கராச்சி போன்ற நகரங்களில் பெரியளவிலான பண்ணைவீடுகளை வாங்குதல், லாகூரில்ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடங்குதல் என தங்களது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளனர்.

இதன்மூலம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1,270 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர். 2015-ல் தான் ராணுவ தளபதியாக கமர் ஜாவித் பாஜ்வா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை குறுகிய காலத்தில் அவர்களது குடும்பத்தின் வருமானம் பல நூறு மடங்கு பெருகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஃபேக்ட் போக்கஸ் இதழின் இணையதளம்பாகிஸ்தானில் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அந்த முடக்கத்தை நீக்கஃபேக்ட் போக்கஸ் இதழ் நிர்வாகத்தார் முயன்று வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.