சிஎஸ்கேவிற்கு வரும் முன்னே கோடீஸ்வரன்! சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு எவ்வளவு?

இந்திய கிரிக்கெட்டின் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்களில் ஒருவரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன், இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் பிறந்து, தனது திறமையால் இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள சஞ்சு சாம்சன், மைதானத்தில் மட்டுமல்ல, சொத்து மதிப்பிலும் ஒரு ராயல் ஆகவே திகழ்கிறார். தற்போது சிஎஸ்கே அணிக்கு மாற இருப்பதாக செய்திகள் தீயாய் பறக்கும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add Zee News as a Preferred Source

ஐபிஎல்-ல் தொடங்கிய கோடி மழை

சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை, ஐபிஎல் தொடரின் மூலம் பெரும் உச்சத்தை தொட்டது. 2012-ம் ஆண்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வெறும் 8 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சாம்சனின் வளர்ச்சி அபரிமிதமானது. பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறிய அவரது தலைவிதி, தலைகீழாக மாறியது. 2018ல் 8 கோடி ரூபாய்க்கும், 2022ல் 14 கோடி ரூபாய்க்கும் ராஜஸ்தான் அணியால் தக்க வைக்கப்பட்டார். தற்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக, ஒவ்வொரு சீசனுக்கும் 14 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். இது, ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ஒருவராக அவரை மாற்றியுள்ளது.

பிசிசிஐ ஒப்பந்தம் மற்றும் பிற வருமானங்கள்

ஐபிஎல் மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்திலும் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். ‘சி’ பிரிவு வீரராக உள்ள அவருக்கு, ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக பிசிசிஐ வழங்குகிறது. இது தவிர, ஒவ்வொரு சர்வதேச போட்டியிலும் விளையாடுவதற்கான கட்டணமும் தனி. விளம்பர உலகிலும் சஞ்சு சாம்சன் ஒரு மினி ஸ்டார்தான். Haeal, Puma, BharatP மற்றும் MyFab11 உள்ளிட்ட பல முன்னணி பிராண்டுகளின் விளம்பர முகமாக அவர் இருக்கிறார். இதன் மூலம், ஆண்டுக்கு பல கோடிகளை அவர் வருமானமாக ஈட்டுகிறார்.

நிகர சொத்து மதிப்பு

2025-ம் ஆண்டின் நிலவரப்படி, சஞ்சு சாம்சனின் நிகர சொத்து மதிப்பு சுமார் 90 கோடி ரூபாய் (சுமார் 10.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது ஐபிஎல் சம்பளம், பிசிசிஐ ஒப்பந்தம், விளம்பரங்கள் மற்றும் பிற முதலீடுகள் அனைத்தும் இதில் அடங்கும். கேரளாவின் திருவனந்தபுரத்தில், சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான பங்களா ஒன்றும் சாம்சனுக்கு சொந்தமாக உள்ளது. சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது கடின உழைப்பாலும், திறமையாலும் இன்று கோடிகளில் புரளும் சஞ்சு சாம்சனின் வாழ்க்கை, பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது. அவரது கிரிக்கெட் வாழ்க்கை மென்மேலும் உயர, இந்த பிறந்தநாளில் வாழ்த்துவோம்!

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.