உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்


நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விலைகள் உயர்வு

உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், தக்காளி, கறி மிளகாய், போஞ்சி, லீக்ஸ், கரட் உள்ளிட்ட மரக்கறி வகைகள், பழங்கள் மற்றும் தேங்காய் என்பனவற்றின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளன.

உள்நாட்டு உருளைக் கிழங்கின் விலை கிலோ கிராமிற்கு 420 முதல் 500 ரூபாவாகும்.

உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Food Items Price In Sri Lanka Onion Vegetables

ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 320 முதல் 400 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் தக்காளியின் விலை 430 முதல் 500 ரூபா வரையில் உயர்வடைந்துள்ளது.

போதியளவு பொருட்கள்

பாகற்காய், கரட், போஞ்சி, லீக்ஸ் போன்றவற்றின் சந்தை விலைகளம் உயர்வடைந்துள்ளன.
பழங்களின் விலைகளும் பொதுவாக உயர்வடைந்துள்ளன.

உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Food Items Price In Sri Lanka Onion Vegetables

பொருளாதார மத்திய நிலையங்களுக்கு போதியளவு பொருட்கள் நிரம்பம் செய்யப்படாத காரணத்தினால் இவ்வாறு விலைகள் உயர்வடைந்துள்ளன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.