சபரிமலை செல்லும் பக்தர்கள் நெய் தேங்காய் இருமுடியை விமானத்திற்குள் கேபின் பேக்கஜாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மண்டல பூஜை முடியும் வரை பக்தர்கள் வசதிக்காக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எளிதில் தீப்பற்ற கூடிய பொருள் என்ற பட்டியலில் உள்ளதால் நெய் தேங்காயை விமானத்துக்குள் கொண்டு செல்ல இதுவரை அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்த தடையை தற்போது நீக்கியுள்ள சிவில் விமான பாதுகாப்பு துறை எக்ஸ்-ரே மற்றும் வெடிபொருள் சோதனை ஆகியவற்றை கடந்த பிறகே விமானத்திற்குள் இருமுடி கட்டு அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.