பொதுவாக நிறைய பேருக்கு தொடையில் கொழுப்பு சேர்ந்து காணப்படும்.
இதை சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் சரி செய்ய முடியுமாம்.
அதற்கு சில உடற்பயிற்சிகள் உதவுகின்றது.
தற்போது அதில் ஒன்றினை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்
ஸ்குவாடிங் (Squating)
GETTY IMAGES
- விரிப்பில் நேராக நிற்க வேண்டும். கைகளை முன்புறமாக நீட்ட வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் நிற்க வேண்டும்.
- இதேநிலையில் 10 நொடிகள் இருக்கலாம். பின்பு, பழைய நிலைக்கு வந்து மீண்டும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். இதேபோல் தொடர்ந்து 5 முறை செய்யலாம்.
- பயிற்சியை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள் செய்யலாம். ஸ்குவாட்டிங் மற்றும் லஞ்சஸ் பயிற்சியையும் சேர்த்துச் செய்யலாம்.
பலன்
- இந்தப் பயிற்சியானது காலின் வடிவமைப்பை மேம்படுத்தும்.
- உடல் சமநிலைத்தன்மை பெற உதவும்.
- தொடையில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.
- கால் தசைகள் வலுப்பெறும்.
- இதயத் துடிப்பைச் சீராக்க உதவும். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.