இபிஎஃப்ஓ ஆன்லைன் நாமினேஷன்: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) செப்டம்பர் மாதத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்தது, அதே நேரத்தில் அதன் நிகர சந்தாதாரர்கள் 16.82 லட்சம் பேர் உயர்ந்துள்ளனர். 1951 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையை வெளியிட்டதன் மூலம் இபிஎஃப்ஓ நடைமுறைக்கு வந்தது, இதனால் 1952 சட்டம் மாற்றப்பட்டது. அதன்படி தொடர்ந்து இபிஎஃப்ஓ அதன் சந்தாதாரர்களை தங்களின் குடும்ப விவரங்கள், சுயவிவரத் தரவு மற்றும் நாமினேஷனை ஆன்லைனில் அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தி வருகிறது.
தற்போது ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கான பயனர்கள் இபிஎஃப்ஓ கணக்கில் சேர்வதால், அவர்களும் தங்களின் ஆன்லைன் நாமினேஷனை தாக்கல் செய்ய வேண்டும். அந்தவகையில் நீங்கள் இன்னும் உங்கள் நாமினேஷனை தாக்கல் செய்யவில்லை என்றால், ஆன்லைனில் எப்படி செய்வது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதற்கு நீங்கள் முதலில், உங்கள் UAN எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி UAN போர்ட்டலில் லாகின் செய்ய வேண்டும். முதல் முறையில் நீங்கள் லாகின் செய்கிறீர்கள் என்றால் இதற்கு நீங்கள் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். இந்த செயல்முறையை முடித்தப் பின் பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
1. முதலில் போர்ட்டலில் லாகின் செய்தப் பின் ‘இ-நாமினேஷன்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
2. ஃபேமிலி டிக்ளரேஷன் பக்கத்தின் கீழ் ஹேவிங் ஃபேமிலி ஆப்ஷனில் ஆம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. ‘குடும்ப விவரங்களைச் சேர்’ என்பதைக் கிளிக் செய்யவும்- இதில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளைச் சேர்க்கலாம்.
4. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, உங்களுடன் உள்ள உறவு, முகவரி மற்றும் புகைப்படம் போன்ற விவரங்களை நிரப்பவும்.
5. மொத்த பங்கின் தொகையை அறிவிக்க, நாமினேஷன் விவரங்களைக் கிளிக் செய்யவும். பின்னர் ‘Save EPF nomination’ என்பதைக் கிளிக் செய்யவும்.
6. பிறகு ஆதார் OTP ஐ உருவாக்க E-sign ஐ கிளிக் செய்யவும். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் அனுப்பப்பட்ட OTPயை சப்மிட் செய்யவும்.