தேர்தல் பிரசாரத்துக்கு தடை… ஆனா ஓட்டு போடாதவங்களுக்கு அபராதம்… இது எப்படி இருக்கு?

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு அனல் பறந்தவரும் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால், இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில் ஆளும் பாஜக உள்ளது. 2017 இல் இழந்த வெற்றி வாய்ப்பை இந்த முறையாவது பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், டெல்லி மாடலை கொண்டு குஜராத் மாடலை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தில் ஆம் ஆத்மியும் களமிறங்கி உள்ளதால் அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்துக்கு தடைவிதித்தும், அதேசமயம் தேர்தலில் ஓட்டு போடாத வாக்காளர்களுக்கு அபராதம் விதிக்கும் குஜராத்தின் அதிசய கிராமம் அனைவரின் கவனத்தையும ஈர்த்துள்ளது. குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ராஜ்கோட்டில் இருந்து 25 கிவோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராஜ் சமதியாலா தான் அந்த அதிசய கிராமம்.

இந்த கிராமத்தில் எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி கிடையாது. தேர்தல் பிரசாரம் நடை பெற்றால் ஊருக்கு ஆகாது என்ற கிராம மக்களின் நம்பிக்்கை காரணமாக இந்த தடை அங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அரசியல் கட்சிகளின் பேனர்களை வைக்கவும், துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவும் கூட இந்த கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், தேர்தல் நாளன்று தங்களது வாக்குகளை செலுத்தாத வாக்காளர்களுக்கு 51 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையில் ராஜ் சமதியாலா கிராமத்தில் அமலில் உள்ளது. இதனை கண்காணிக்க, ஒவ்வொரு தேர்தலின்போதும் சில தினங்களுக்கு முன் கிராம வளர்ச்சி குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவின் நடவடிக்கைக்கு பயந்து ஒவ்வொரு தேர்தலிலும் கிட்டதடட் 100% வாக்குபதிவு இ்ந்க கிராமத்தில் பதிவாகி வருகிறது.

வைஃபை, சிசிடிவி கேமரா என நவீன வசதிகளுடன் இருக்கும் ராஜ் சமதியாலாவில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர். இவற்றில் சுமார் 1000 பேர் வாக்களிக்க தகுதியானவர்களாத உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.