துண்டு போட்ட தங்க தமிழ்செல்வன்; அப்போ ஒரு சீட் கன்ஃபார்ம் போங்க!

இளைஞரணி செயலாளராக

மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

திமுக மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நியமிக்கப்பட்டு உள்ளார். துணை செயலாளர்களாக எஸ்.ஜோயல், ரகுபதி, இளையராஜா, அப்துல்மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

மாநில மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி மாநில செயலாளராக ஹெலன் டேவிட்சன், இணை செயலாளர் குமரி விஜயகுமார், துணை செயலாளர்கள் பவானி ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

மேலும் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப.ராணி. தொண்டர் அணி இணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார், துணை செயலாளர்கள் சத்யா பழனிகுமார், ரேகா பிரியதர்ஷினி, விஜிலா சத்யானந்த், மாலதி நாகராஜ் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

மேலும் பிரசார குழு செயலாளர்கள் சேலம் சுஜாதா, கே.ராணி ரவிச்சந்திரன், அமலு, மாலதி நாராயணசாமி, தேன்மொழி, உமா மகேஷ்வரி, ஜெசி பொன்ராணி. சமூக வலைதள பொறுப்பாளர்கள் டாக்டர் யாழினி, ரத்னா லோகேஸ்வரன், அ.ரியா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

மேலும் ஆலோசனைக் குழு பொறுப்பாளர்கள் காஞ்சனா கமலநாதன், சங்கரி நாராயணன், காரல் மார்க்ஸ், சிம்லா முத்துசோழன், சித்ரமுகிரி சத்தியவாணி முத்து, வாசுகி ரமணன், காயத்ரி சீனிவாசன், மலர் மரகதம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளதாக திமுக பொதுச்செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளார்.

இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட கழகம் சார்பாக தேனி என்ஆர்டி நகரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் இரவு சுமார் 7 மணியளவில் திமுக நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வரும் 27ம் தேதி இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை ஒட்டி தேனி வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகரம் பேரூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்த தானம் மருத்துவ முகாம் அறுசுவை உணவு வழங்குவது உள்ளிட்ட பணிகளை சீரும் சிறப்புமாக செய்வது குறித்து ஆலோசனை செய்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார், ஒன்றிய செயலாளர்கள் ரத்தின சபாபதி, எல்எம் பாண்டி, ஐயப்பன், நகர செயலாளர்கள் நாராயண பாண்டியன், புருஷோத்தமன், இலியாஸ் மற்றும் பேரூர் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாட தங்க தமிழ்செல்வன் தீவிரமாக இறங்கி இருப்பது, திமுகவினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை வைத்து பார்க்கும்போது வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஒரு சீட் கன்ஃபார்ம் என்பது உறுதியாக தெரிவதாக லோக்கல் கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.