பிரபல பாலிவுட் நடிகையுடன் கே.எல் ராகுலுக்கு விரைவில் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?


இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுலுக்கும், பிரபல பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி-க்கும் இடையே விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கே.எல் ராகுல் திருமணம்

கடந்த 2014ம் ஆண்டு இந்திய அணிக்காக களமிறங்கிய கே.எல் ராகுல் இதுவரை 45 ஒருநாள் போட்டிகள், 43 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 72 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கே.எல் ராகுல் சமீபத்திய ஆண்டுகளில் நல்ல பார்மில் இருந்த வருவதால் அவர் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரராகவும், இந்திய கிரிக்கெட் அணிக்கு துணை கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

பிரபல பாலிவுட் நடிகையுடன் கே.எல் ராகுலுக்கு விரைவில் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா? | Kl Rahul Marry With Athiya ShettyK L Rahul – கே.எல் ராகுல்(Twitter) 

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகள் மற்றும் பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டி-யுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கே.எல் ராகுலும், அதியா ஷெட்டியும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காதலித்து வருவதாக செல்லப்பட்டு வந்த நிலையில், இவர்களது திருமணம் தொடர்பான தகவல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது திருமணம்?

கே.எல் ராகுலுக்கும், அதியா ஷெட்டிக்கும் இடையிலான திருமணம் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வருகிற ஜனவரி மாதம் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த திருமணம் மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் வைத்து நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனது மகளின் திருமணம் குறித்து சுனில் ஷெட்டி சமீபத்தில் திரைப்பட விழா தெரிவித்த தகவலில், இன்னும் மூன்று மாதங்களில் தனது மகள் அதியா ஷெட்டி-யின் திருமணம் இருக்கலாம் என குறிப்பிட்டு இருந்தார்.

பிரபல பாலிவுட் நடிகையுடன் கே.எல் ராகுலுக்கு விரைவில் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா? | Kl Rahul Marry With Athiya ShettyK L Rahul & Athiya Shetty
 – கே.எல் ராகுல் & அதியா ஷெட்டி(Twitter)

கே.எல் ராகுலுக்கும், அதியா ஷெட்டிக்கும் இடையிலான திருமணம் எப்படியும் அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து மார்ச் மாதத்திற்குள் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

அதியா ஷெட்டி-யின் பிறந்தநாள் அன்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல் ராகுல் “என்னுடைய உலகத்தை மிகவும் அழகாக மாற்றியதற்கு நன்றி” என்ற வார்த்தைகளுடன் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.