பொதுவாக முகப்பரு வந்தாலே அதன் தழும்புகள் நமது முகத்தை விட்டு எளிதில் நீங்காத வடுவாக மாறிவிடுகின்றது.
முகப்பரு வடுக்களை போக்குவது சவாலானதாக இருக்கும். முகப்பரு தழும்புகள் தோலில் நீண்ட காலம் நீடித்து சருமத்தின் நிறத்தை மாற்றிவிடும்.
இது பலரையும் மன ரீதியாகவும் பாதிப்பை உண்டு செய்யும்.
இந்த முகப்பரு வடுக்களை வீட்டிலேயே இயற்கையாகவே குணப்படுத்தலாம்.
அவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
image – medicalnewstoday
- சிட்டிகை மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் பால் பவுடர் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் ஆக்கவும். அதை முகத்தில் தடவி காயும் வரை விட்டு பிறகு முகத்தை சுத்தமாக கழுவி விடலாம்.
-
ஒரு சிறிய காட்டன் பாலில் 2-3 சொட்டுகள் விட்டு பாதிக்கபட்ட பகுதிகளில் தடவி விடவும். இதை 2-3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் வடு குறைந்து வருவதை காணலாம்.
- முகப்பரு தழும்புகளை போக்க கின்ணத்தில் இரண்டு டீஸ்பூன் முல்தானி மிட்டி, ஒரு டீஸ்பூன் சந்தனம் மற்றும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இப்போது தேவைக்கேற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் கலந்து மென்மையான பேஸ்ட்டாக உருவாக்கவும். இந்த ஃபேஸ் பேக் முகத்தை சுத்தம் செய்த பிறகு ஒரு ஃபேஷியல் பிரஷ் மூலம் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும். பிறகு இலேசான மாய்சுரைசரை கொண்டு முகத்தை ஈரப்படுத்தவும். எண்ணெய் இல்லாத மற்றும் கறைபடியாத சருமத்துக்கு வாரம் ஒரு முறை இதனை செய்யலாம்.
- ஒரு கொத்து பச்சை திராட்சையை எடுத்துகொள்ளுங்கள். தண்ணீரில் ஈரப்படுத்தி ஒரு டீஸ்பூன் படிகாரம் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து தெளிக்கவும். திராட்சையை மேலாக தூவி அடுப்பில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். திராட்சையிலிருந்து சாற்றை பிழிந்து அதை முகம் முழுக்க தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் வாரத்தில் இரண்டு நாட்கள் இதை செய்து வந்தால் போதும் முகப்பரு வடுக்கள் குறைய செய்யும்.