கால் மேல் கால் போட்டு சொகுசாக வாழ்ந்த கோடீஸ்வரர்.. இப்போது ரோட்டு கடையில் இறைச்சி விற்க காரணம்


சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு சமயத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்த நிலையில் தற்போது ரோட்டு கடையில் இறைச்சியை விற்பனை செய்து வருகிறார்.

பெரும் கோடீஸ்வரர்

52 வயதான Tang Jian ஒரு சமயத்தில் கோடீஸ்வர தொழிலதிபராக வலம் வந்தார்.
அவருக்கு சொந்தமாக பல உணவகங்கள் இருந்தன. இதெல்லாம் 2005 வரையில் தான், தொழிலில் பலத்த நஷ்டமடைந்து அனைத்தும் திவாலானது.

அதன்படி உணவகங்கள், வீடுகள், கார்கள் என அனைத்தையும் அவர் விற்றுள்ளார்.
இதையடுத்து $6.4 மில்லியன் (ரூ. 2,35,73,01,760) கடனை அடைக்க ரோட்டு கடைகளில் இறைச்சியை தானே சமைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

கால் மேல் கால் போட்டு சொகுசாக வாழ்ந்த கோடீஸ்வரர்.. இப்போது ரோட்டு கடையில் இறைச்சி விற்க காரணம் | Millionaire Now Road Shop Vendor

YouTube screngrab

நம்பிக்கை

Tang Jian கூறுகையில், பொழுதுபோக்கு பூங்காக்கள் அல்லது சந்தைகளில் விற்கப்படுபவைகளுடன் ஒப்பிடும் போது, ​​எங்களுடைய இறைச்சி ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நிறைந்தது.

நாம் ஒவ்வொருவரும் சவாலான வாழ்க்கையை வாழ்கிறோம் மற்றும் பல சிரமங்களை எதிர்கொள்கிறோம், ஆனால் நாம் ஒருபோதும் தோற்கடிக்கப்படக்கூடாது.

எனது கடனை எப்போது செலுத்த முடியும் என்று தனக்குத் தெரியாது, ஆனால் நிச்சயம் என்னால் முடியும் என்று நம்புகிறேன், நம்மில் பலர் ஒன்றுமில்லாமல் பிறக்கிறோம். மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதற்கு ஏன் பயப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Tang Jian வாழ்க்கை கதையால் பலர் ஈர்க்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றன.

கால் மேல் கால் போட்டு சொகுசாக வாழ்ந்த கோடீஸ்வரர்.. இப்போது ரோட்டு கடையில் இறைச்சி விற்க காரணம் | Millionaire Now Road Shop Vendor

SCMP composite/handout



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.