ஏர் இந்தியா: ஆண் – பெண் பணியாளர்கள் எப்படி பணிக்கு வரவேண்டும்… புதிய விதிமுறைகள் என்னென்ன?

ஏர்-இந்தியா நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா குழுமம், நிறுவனத்தில் பணியாற்றும் ஆண், பெண்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. விமான பயணத்தின்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது போன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய விதிமுறைகளை தங்களின் விமான பணிக்குழுவுக்கு ஏர் இந்திய விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆண் பணியாளர்களுக்கான விதிமுறைகள் :

ஆண்கள் விமானத்தில் பணியில் ஈடுபட்டிருக்கும் போது கருப்பு நிற மேல்சட்டையைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ட்டை பின்கள் நிர்வாகம் வழங்காத பட்சத்தில் அவை இல்லாமல் டை அணியலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் ட்டை பின்கள் வாங்கி பயன்படுத்த அனுமதி இல்லை. கறுப்பு நிற காலுறைகளை மட்டுமே சீருடையுடன் அணிய வேண்டும். அவற்றில் எந்த சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கக் கூடாது. அதோடு பக்கவாட்டு வகடு சிகை அலங்காரத்துக்கு மட்டுமே அனுமதி. தினமும் தலைக்கு ஹேர் ஜெல் பயன்படுத்த வேண்டும். தினமும் ஷேவ் செய்து வரவேண்டும்.

விமானங்களில் பணிபுரியும் ஆண்கள்

வழுக்கை இருக்கும் ஆண்கள் தலைமுடியை மொத்தமாக எடுத்துவிட வேண்டும். நரை முடி இருக்கக் கூடாது. நரை இருந்தால் அதில் ஹேர் டையிங் செய்ய வேண்டும். மருதாணி போட்டுவர அனுமதி இல்லை. திருமண மோதிரம் அணிந்து கொள்ள அனுமதி. ஆனால் அதில் எந்த சின்னங்களோ, கற்களோ பொறிக்கப்பட்டிருக்கக் கூடாது.

விமானம்

பெண் பணியாளர்களுக்கான சீருடையிலும் புது விதிமுறைகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது :

விமான பணிப்பெண்கள் புடவை, வெஸ்டர்ன் உடை அணியலாம். இந்தச் சீருடை அணியும் போதும் நீளமான காலுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பொட்டுக்களை அரை செ.மீட்டர் விட்டத்தில் தான் வைக்க வேண்டும். ஐஷேடோ, நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக் (உதட்டுச்சாயம்) போன்றவற்றைப் பயன்படுத்தி வர வேண்டும். இவை அனைத்தும் நிறுவனத்தின் பொருள்களாக இருக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் வாங்கி பயன்படுத்த கூடாது. பெண் பணியாளர்கள் தங்கம் அல்லது சாதாரண கம்மல்களை அணியலாம். மோதிரம் ஒரு செ.மீட்டர் அகலத்திற்கு மேல் இருக்கூடாது. மணிக்கட்டு, கழுத்து, கணுக்காலில் மத வழக்கப்படியான கயிறுகளைக் கட்டக்கூடாது. தங்களில் தோல் நிறத்துக்கு தகுந்த பவுண்டேஷன்களை பயன்படுத்த வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.