ஆன்லைன் காதலனை பார்க்க 5000 கி.மீ பயணம் செய்த பெண்: இறுதியில் கடற்கரையில் பிணமாக கிடந்த அவலம்!


சமூக வலைதளத்தில் அறிமுகமான காதலனை சந்திப்பதற்காக சுமார் 5000 கி மீ பயணம் செய்த மெக்சிகோ-வை சேர்ந்த பெண் ஒருவர் ஹுவாச்சோ கடற்கரையில் உடல் உறுப்புகளாக கொலை செய்யப்பட்டு சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆன்லைன் காதல் 

மெக்சிகோ நாட்டை சேர்ந்த 51 வயதான பிளாங்கா அரேலானோ தனக்கு ஆன்லைன் செயலி மூலம் அறிமுகமான பெரு நாட்டை சேர்ந்த 37 வயதான ஜுவான் பாப்லோ ஜீசஸ் வில்லாஃபுர்டே(Juan Pablo Jesus Villafuerte) என்ற ஆண் நண்பரை சந்திப்பதற்காக சுமார் 5000 கி.மீ பயணம் செய்து மெக்சிகோவில் இருந்து பெரு நாட்டிற்கு வந்தடைந்துள்ளார்.

ஆன்லைன் காதலனை பார்க்க 5000 கி.மீ பயணம் செய்த பெண்: இறுதியில் கடற்கரையில் பிணமாக கிடந்த அவலம்! | Mexican Woman Flew 5000 Km To Meet Lover In PeruBlanca Arellano – பிளாங்கா அரேலானோ(Twitter)

இந்நிலையில் ஆன்லைன் காதலனை பார்ப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்த மெக்சிகோ பெண், பெரு நாட்டில்  உடல் உறுப்புகளாக கொலை செய்யப்பட்டு  ஹுவாச்சோ (Huacho) கடற்கரையில் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளூர் மீனவர்களால் நவம்பர் 9 ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை

பிளாங்கா அரேலானோ தான் ஆன்லைனில் சந்தித்த ஜுவான் பாப்லோ என்ற நபரை பற்றியும், அவரை விரைவில் நேரில் பார்ப்பதற்காக பெரு-விற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் கடந்த ஜூலை மாத இறுதியில் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 37 வயதுடைய தனது ஆன்லைன் காதலனை பெரு நாட்டின் ஹுவாச்சோ கடற்கரையில் சந்திக்க போவதாகவும், இறுதியாக பிளாங்கா அரேலானோவிடம் நவம்பர் 7ம் திகதி இறுதியாக பேசியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 7 திகதி பிறகு பிளாங்கா-விடம் இருந்து எந்த தகவல்களும் இல்லாத நிலையில், மருமகள் கார்லா அரேலானோ ட்விட்டரில் தனது அத்தை பிளாங்கா அரேலானோ இருப்பிடம் குறித்து தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்குமாறு உதவி கேட்டுள்ளார்.

இந்நிலையில் பிளாங்கா உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யப்பட்டு உடல் சிதைந்த நிலையில் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகீர் கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் காதலனை பார்க்க 5000 கி.மீ பயணம் செய்த பெண்: இறுதியில் கடற்கரையில் பிணமாக கிடந்த அவலம்! | Mexican Woman Flew 5000 Km To Meet Lover In PeruBlanca Arellano – பிளாங்கா அரேலானோ(Twitter)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.