இறுதிநாட்களில் இரகசியமாக புற்றுநோயுடன் போராடிய மகாராணியார்: வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்


மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத், தனது இறுதி நாட்களில் புற்றுநோயுடன் போராடியதாகவும், கடுமையான வலியுடன் அவதிப்பட்டதாகவும் ஒரு அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கடைசிவரை புன்னகை மாறாத முகத்துடன் காணப்பட்ட மகாராணியார்

பிரித்தானிய மகாராணியார் தான் உயிரிழக்கும் கடைசி நேரம் வரை புன்னகை மாறாத முகத்துடன் காணப்பட்டதை, அவர் பிரித்தானிய பிரதமராக லிஸ் ட்ரஸ்ஸை நியமிப்பதைக் காட்டும் அவரது இறுதிப்படத்திலிருந்து அனைவரும் அறிந்துகொள்ள இயலும்.

அந்த புன்னகையின் பின்னால் அப்படி ஒரு வலியும் வேதனையும் இருந்திருக்கும் என யாராலும் கற்பனை கூட செய்துபார்க்கமுடியாது.

இறுதிநாட்களில் இரகசியமாக புற்றுநோயுடன் போராடிய மகாராணியார்: வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல் | Queen Fought Cancer Final Year

Credit: AP

புற்றுநோய், வலியுடன் போராடிய மகாராணியார்

மகாராணியாரின் இறப்புச் சான்றிதழில், அவர் முதுமை காரணமாக உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர் இரகசியமாக புற்றுநோயுடன் போராடிவந்ததாக, அவரது கணவரான இளவரசர் பிலிப்பின் நண்பரான Gyles Brandreth என்பவர் கூறியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gyles Brandreth, தனது Elizabeth: An Intimate Portrait என்னும் புத்தகத்தில் இந்த அதிர்ச்சியளிக்கும் தகவலைக் குறிப்பிட்டுள்ளார். அந்த புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது.

இறுதிநாட்களில் இரகசியமாக புற்றுநோயுடன் போராடிய மகாராணியார்: வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல் | Queen Fought Cancer Final Year

Credit: PA

மகாராணியார் myeloma எனப்படும் ஒருவகை எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் (bone marrow cancer) அவதியுற்றுவந்ததாக நான் கேள்விப்பட்டேன் என்று கூறியுள்ள Brandreth, மகாராணியார் தனது இறுதி நாட்களில் களைப்பாக காணப்பட்டதையும், உடல் மெலிந்து, நடமாடுவதில் அவருக்கு பிரச்சினை இருந்ததையும் குறித்து அடிக்கடி நாம் கேள்விப்பட்டோம், அது இந்த புற்றுநோய் காரணமாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்கிறார்.

இந்த எலும்பு மஜ்ஜை புற்றுநோயின் முக்கிய அறிகுறியே கடுமையான வலியாகும். குறிப்பாக, இடுப்பு எலும்பும், கீழ் முதுகெலும்பும் கடுமையாக வலிக்குமாம். ஆக, கடைசிவரை புன்னகை மாறாத முகத்துடனேயே மகாராணியார் காணப்பட்டாலும், அவர் கடுமையான வலியால் அவதியுற்றுவந்துள்ளார், அதை வெளியே காட்டாமல் அவர் புன்னகையுடன் வலம் வந்துள்ளார் என்பதை அறியும்போது மனது கனக்கத்தான் செய்கிறது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.