திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம் செய்வதல், புகைப்படம் மாற்றி அமைப்பது, உள்ளிட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்மகாமில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று திடீரென வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.
அப்போது பணியில் இல்லாத 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் சத்துணவு அமைப்பாளர், கிராம உதவி உதவியாளர், சத்துணவு பணியாளர் என உட்பட 10 பேர் தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்தும், மேலும் இதில் ஆரோக்கிய தாஸ், சேவியர் புஷ்பராஜ் ஆகிய இரண்டு சத்துணவு அமைப்பாளர், மற்றும் அங்கன்வாடி பணியாளர் தீபா ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதே நேரத்தில் இத்தகைய சிறப்பு முகாமில் பணியில் இல்லாமல் இருக்கக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.