புதுடெல்லி: கடந்த 2019, 2020 மற்றும் 2021-ம்ஆண்டுகளில் இசை, நடனம், நாடகம், பாரம்பரிய இசை/நடனம்/நாடகம், பொம்மை கலை துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பை அளித்த வெற்றியாளர்கள் 128 பேருக்கு அகாடமி புரஸ்கார் விருதுகளை சங்கீத நாடக அகாடமி நேற்று அறிவித்தது.
மேலும், கலைத்துறையில் சிறந்து விளங்கிய 10 பிரபலங்களை அகாடமி கலைஞர்களாகவும், சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழு அறிவித்துள்ளது. புரஸ்கார் விருது பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், அகாடமி கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு, தாமிர பத்திரம் அளிக்கப்படும். தவிர விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தின் கீழ், 86 கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகடாமி அம்ரித் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.