ஹாமில்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 2வது ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது.
இரு அணிகள் மோதும் 3வது போட்டி வரும் 30ம் தேதி நடக்கிறது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement