இலங்கையில் தரையிறங்கியுள்ள உலகின் மிகப்பெரிய விமானம்


உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்று இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

மிகப்பெரிய உக்ரைனிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஆன்-225  என்ற விமான வகையைச் சேர்ந்த, antonov An-124-100 என்ற  சரக்கு விமானமே இவ்வாறு இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது.  

மத்தள சர்வதேச விமான நிலையில் இன்று காலை 06.35 மணிக்கு குறித்த விமானம் தரையிறங்கியுள்ளது.  

இன்று இரவு மீண்டும் புறப்படும் விமானம்

இலங்கையில் தரையிறங்கியுள்ள உலகின் மிகப்பெரிய விமானம் | World S Largest Plane Lands In Sri Lanka

விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்கும் விமான ஊழியர்கள் ஓய்வெடுத்து செல்லவும் இவ்வாறு விமானம் தரையிறக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து இன்று இரவு இந்த விமானம்  புறப்படவுள்ளதாகவும், 24 பணியாளர்கள் இந்த விமானத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

மலேசியாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி செல்லும் வழியில் இவ் விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த விமானம், அதிகபட்சமாக 640 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1980 களின் பிற்பகுதியில் அன்டோனோவ் என்பவரால் இவ் விமானம் வடிவமைக்கப்பட்டதுடன்,  உலகில் இதுவரை வடிவமைக்கப்பட்ட மிக நீளமான மற்றும் கனமான விமானம் இதுவென்றும் தெரிவிக்கப்படுகின்றது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.