கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பாலவிடுதி, மாயனூர், வாங்கல், தான்தோன்றி மலை தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், சட்ட ஒழுங்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஆகியோர் மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த மாரியம்மாள், மாரிமுத்து, ஜமுனா, தொட்டியம், தங்கம்மாள், ராஜலிங்கம், பழனியப்பன் ஆகிய ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 36 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.