கட்டாய மதமாற்றத்திற்கு தடை.? ஒன்றிய அரசு பரபரப்பு தகவல்.!

பணம், பரிசு பொருட்களை உள்ளிட்டவைகளை கொடுத்து ஆசைகாட்டி நாடுமுழுவதும் கட்டாய மதமாற்றம் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசு அதைத் தடுக்க முடியாமல் திணறிவருகிறது. இப்படியே தொடர்ந்தால் வருங்காலத்தில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள். இந்துக்களின் மீதுள்ள வஞ்சகத்தால் மாற்று மதத்தினர் இத்தகைய கட்டாய மதமாற்றத்தை செயல்படுத்திவருகிறார். எனவே கட்டாய மதமாற்றத்தை தடுக்க சிறப்பு மசோதாவை அமல்படுத்த வேண்டும் என கூறி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தமனூ உச்சநீதிமன்ற நீதிபதி எம்ஆர் ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டாய மதமாற்றம் என்பது மிகவும் அபாயகரமாக மாறிவருவதாகவும், நாட்டின் பாதுக்காப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து கட்டாய மதமாற்றம் குறித்த மாநிலங்களின் கருத்துருக்களை பெற்று, இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘‘ தனி நபரை குறிப்பிட்ட மதங்களுக்கு மாற்ற அடிப்படை உரிமை இருப்பதாக, மதச் சுந்தந்திர சட்டத்தில் ஷரத்துகள் இல்லை. இது ஒரு தீவிரத்தன்மை மிக்க விஷயமாக தற்போது மாறியுள்ளது. நாடு முழுவதும் ஏமாற்றும் மத மாற்றம் தலைவிரித்தாடுகிறது.

இத்தகைய கட்டாய மதமாற்றத்தை அரசு திவிரத்தன்மையோடு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மோசடி, வற்புறுத்தல், வஞ்சகம் உள்ளிட்ட காரணங்களால் கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது. ஒடிஷா, மத்திய பிரதேசம், குஜராத், சட்டிஸ்கர், ஜார்கண், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் ஹரியானா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 9 மாநிலங்கள் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை இயற்றியுள்ளன.

பெண்கள் எப்போது அழகாக இருப்பார்கள்?..பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்தால் கொதிநிலை.!

பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இத்தகைய சட்டங்கள் அவசியமானதாகும். மத சுதந்திரத்திற்கான உரிமை, மேலும் முக்கியமாக, நாட்டின் அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க இத்தகைய மதிப்புமிக்க சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, சட்டமன்றத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்’’ என ஒன்றிய அரசு சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.