ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் காவலரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (38). இவர், கடந்த சில மாதங்களாக ஊட்டி குன்னூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பணி மாற்றுதல் காரணமாக தனது சொந்த ஊரான ஆயில்பட்டிக்கு s.
இந்நிலையில், கடந்த 7 நாட்களாக விடுமுறையில் இருந்த அய்யனார், நாளை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியில் சேர இருந்தார். இந்நிலையில், காவலர் அய்யனார் நேற்றிரவு தனது சொந்த ஊரான ஆயில்பட்டியில் இருந்து நாமகிரிப்பேட்டை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மெட்டாலா பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்தின் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் காவலர் அய்யனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த நாமகிரிப்பேட்டை போலீசார், அய்யனார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
