2021 – 2022 நிதியாண்டில் தேசிய கட்சிகள் பட்டியலில் தேர்தல் நன்கொடையாக ரூ.614.50 கோடி பெற்று பாஜக முதலிடம்..!

டெல்லி : 2021 – 2022 நிதியாண்டில் மட்டும் பாரதிய ஜனதா கட்சி 614 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது. தேசிய அளவிலான 7 கட்சிகள் நடப்பு நிதியாண்டு ரூ.20,000 கோடிக்கு மேல் பெற்றுள்ள நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதில் முதல் 2 இடங்களில் உள்ள பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த ஆண்டைவிட சுமார் 28% அதிக நன்கொடைகளை பெற்றுள்ளன.

இதில் அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சிக்கு நடப்பாண்டில் ரூ.614.5 கோடி நன்கொடையாக குவிந்திருக்கிறது. கடந்த ஆண்டு இக்கட்சி பெற்றிருந்த நன்கொடை ரூ.477.7 கோடியாகும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 28.7% கூடுதலாக பாஜக நன்கொடைகளை பெற்று இருக்கிறது. இது காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள நன்கொடை தொகையை விட 6 மடங்கு அதிகமாகும். காங்கிரஸ் கட்சிக்கும் 28.1% அளவுக்கு நன்கொடை அதிகரித்துள்ளது. அக்கட்சிக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.95.5 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு காங்கிரஸ் கட்சி பெற்றிருந்த நன்கொடை ரூ.74.5 கோடியாகும். பாஜக நன்கொடையாக பெற்றுள்ள ரூ.614.5 கோடியில் சுமார் 56% அறக்கட்டளைகளில் இருந்து பெறப்பட்டது. புளு டாட் எலெக்ட்ரோ டிரஸ்ட், பாரதி ஏர்டெல், ஏர்செலர் மிட்டல், ஜி.எம்.ஆர்., டி.எல்.எஃப்., டோரண் பவர் ஆகிய குழுமங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு 336.5 கோடி நன்கொடை அளித்துள்ளன. 10 கோடிக்கு மேற்பட்ட நன்கொடைகள் ஏ.பி.ஜெனரல் அறக்கட்டளை மூலம் பாஜகவை வந்தடைந்துள்ளதாக தேர்தலை ஆணையத்தில் அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.