எம்ஜிஆரை அப்படி அழைத்தால் பிடிக்காது… ஸ்டாலின் மலரும் நினைவுகள்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர்

பங்கேற்றார். மறைந்த முன்னாள் முதல்வரான எம்ஜிஆருக்கு சொந்தமான கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி என்பதாலும், எம்ஜிஆரும், கருணாநிதியும் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், அவருடனான தமது நேரடி அனுபவங்களை மலரும் நினைவுகளாக முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.

எனது தந்தையின் நெருங்கிய நண்பராக இருந்ததால் எம்ஜிஆரை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சேத்துப்பட்டு பள்ளியில் படித்து கொண்டிருந்தபோது அவரை அவ்வபோது நேரில் சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அவர் என் மீது அதிகம் அன்பு கொண்டிருந்தார்.

எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களை ரீலிசாகும் நாளில் பார்ப்பதையும் சில காலம் வழக்கமாக கொண்டிருந்தேன். புதிதாக ரிலீசாகும் தமது படங்கள் குறித்து என்னிடம் எம்ஜிஆர் என்னிடம் கருத்து கேட்பார். நடிப்பு குறித்து எனக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார்.

நான் சார் என்று அவரை அழைத்தால் அது எம்ஜிஆருக்கு பிடிக்காது. அவர் இப்படி சொல்லும் நான் மரியாதை நிமித்தமாக அவரை சார் என்று அழைத்தபோது அதுகுறித்து அவர் என தந்தை கருணாநிதியிடம் ஒரு முறை புகாரே சொல்லிவிட்டார். திமுகவில் இருந்து வெளியேறி எம்ஜிஆர் புதிய இயக்கத்தை தொடங்கினாலும், அவர் அண்ணாயிசத்தைதான் பின்பற்றினார்.

எம்ஜிஆரின் மனைவியான ஜானகி மிகவும் திறமைசாலி. சிலம்பம் கலையில் கைத்தேர்ந்தவர். தமிழ் உட்பட 6 மொழிகளில் புலமை மிக்கவர். அவர் நடிதத முதல்படமான மருதநாட்டு இளவரசிக்கு கதை எழுதியவர் கலைஞர்

தான். அந்த படத்தில் எம்ஜிஆர், ஜானகி, கருணாநிதி ஆகிய மூவரும் இணைந்து பணியாற்றினர். மூன்று பேரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் நாம்.

டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க, கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் அனுமதி அளிக்கப்பட்டது. சைகை மொழியை பள்ளிகளில் மொழி பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை என் கவனத்துக்கு வந்துள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

திமுகவில் பொருளாளர் பதவி வகித்து வந்த எம்ஜிஆருக்கும், கட்சித் தலைவருமான கருணாநிதிக்கும் இடையே கட்சியின் நிதி நிலை விவரம் குறித்து கருத்து வேறுபாடு ஏற்படவே, தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக என்ற பேரில் 1972 இ்ல் கட்சியை துவங்கினார் எம்ஜிஆர். அதன் பிறகு தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார் அவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.