
முன்னாள் சீன அதிபர் ஜியாங் ஜெமின் (Jiang Zemin) 96 வயதில் காலமானார்.

தெற்கு அமெரிக்காவில் வீசிய சூறாவளியால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் மின்கம்பங்கள் சேதமானதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஹங்கேரியில் தற்போது H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவி வருவதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் அய்பக் நகரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 15 பேர் உயிரிழந்தனர்.

போலந்து வழியாக மாதந்தோறும் சுமார் 450,000 டன் உக்ரேனிய தானியங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

சீனாவில் பலத்த போராட்டங்களுக்குப் பிறகு Guangzhou பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.

பிரான்ஸ் நாட்டின் பழைமையான ‘ஃபிரெஞ்சு பகெட்’ (French baguette breads) என்ற பிரெட்டுக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறதது.

25 ஆண்டுகளாக ஒரு ரசிகரால் சேகரிக்கப்பட்ட போக்கிமான் (Pokémon) நினைவுச்சின்னங்களின் மிகப்பெரிய தொகுப்பு ஏலத்தில் விலை போகாமல் போனது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

இஸ்லாமிய அரசு குழுவின் (IS) தலைவரான அபு அல்-ஹசன் அல்-ஹாஷிமி அல்-குரைஷி சமீபத்திய தாக்குதல் ஒன்றில் உயிரிழந்ததாக ஐ.எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அறிவித்திருக்கிறார்.

ஜிம்பாப்வேயில் பல தசாப்தங்களுக்குப் பிறகு, முதன்முறையாக கருப்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.