சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதிகளவு வரி வசூலில் தமிழகம் – புதுச்சேரி 3ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் வருமான வரி வசூல் இலக்கில் இதுவரை 53% வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் என முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
