கடவுள் தான் சொன்னார்., 37,000 அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்!


அமெரிக்காவில் 37,000 அடி உயரத்தில் வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் பெண் ஒருவர் தன்னுடன் சேர்த்து அனைத்து பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்து விதமாக நடுவானில் விமான கதவுகளை திறக்கமுயன்றுள்ளார்.

சனிக்கிழமையன்று, ஹூஸ்டனில் இருந்து ஒஹாயோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரத்திற்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் 34 வயது பெண்மணி ஒருவர் பயணித்துள்ளார்.

விமானம் நடு வானில் பறிந்து கொண்டிருந்த போது, அப்பெண் தனது இருக்கையில் இருந்து எழுந்து விமான குழுவினரிடம் சென்று ஜன்னலை திறந்து பார்க்க வேண்டும் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் இது ஆபத்தானது என்று கூறி பெண்ணை இருக்கையில் சென்று அமருமாறு கூறியுள்ளனர்.

கடவுள் தான் சொன்னார்., 37,000 அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்! | Women Passenger Tries Open Flight Door Mid AirCredit: Joe Pries

ஆனால், அவர்கள் கூறியதைக் கேட்டாகமல் அப்பெண் தொடர்ந்து அவசர கால வெளியேற்றம் கொண்ட இருக்கை அருகே சென்று ஜன்னலை திறக்க முயன்றுள்ளார்.

இதை கண்ட சக பயணிகள் பீதியடைந்த நிலையில், அப்பெண்ணை தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணோ தன்னை தடுத்த ஒரு பயணியை கடித்து ஜன்னலை திறந்தே தான் தீருவேன் என்று அடம் பிடித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த விமான குழுவினர் பெண்ணை கட்டுப்படுத்தினர். அப்போது வினோதமாக நடந்துகொண்ட அப்பெண், தன் தலையை விமானத்தின் தரையில் மோதிக்கொண்டு, “கடவுள்தான் என்னை ஒஹாயோ செல்ல சொன்னார். கடவுள்தான் என்னை விமானத்தின் கதவை திறக்க சொன்னார்” என்று தொடர்ந்து பிதற்றியுள்ளார்.

37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக விமானிகள் அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்கினர். பின்னர் அமெரிக்க காவல்துறை அந்த பெண்ணை கைது செய்தனர்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.