புதுடில்லி, விமான நிலையத்திற்குள் பயணியரை அனுமதிக்கும் நடைமுறையை காகிதப் பயன்பாடு அற்றதாகவும், தடையின்றியும் செய்து முடிக்கும் முக அங்கீகார தொழில்நுட்பம், மூன்று விமான நிலையங்களில் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
விமான பயணம் மேற்கொள்ளும் பயணியர், பல்வேறு சோதனைகளை கடந்து விமான நிலையத்திற்குள் செல்லும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.
இதை தடையின்றியும், தொடர்பற்றதாகவும் மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, எப்.ஆர்.டி., எனப்படும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவாக விமான நிலையத்திற்குள் செல்ல முடியும். அதற்கு, ‘டிஜி யாத்ரா’ என்ற, ‘மொபைல் போன்’ செயலியை பயணியர் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
அதில் ஆதார் எண் மற்றும் சுய புகைப்படம் வாயிலாக இணைய வேண்டும்.
அதன்பின் ஒவ்வொரு முறையும் விமான நிலையம் செல்லும் போதும், முக அங்கீகார தொழில்நுட்பம் வாயிலாக உள்ளே செல்ல முடியும்.
இந்த தொழில்நுட்பம், நாட்டின் ஏழு விமான நிலையங்களின் உள்நாட்டு முனையத்தில் மட்டும் முதற்கட்டமாக அறிமுகம்ஆகிறது.
இந்த வகையில், புதுடில்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
இது, அடுத்த ஆண்டு மார்ச் முதல், ஹைதராபாத், கோல்கட்டா, புனே மற்றும் விஜயவாடா விமான நிலையங்களில் நடைமுறைக்கு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement