புனே, கோவாவில் இன்றும், நாளையும், ‘8வது எடிஷன் இந்திய பைக் வார திருவிழா’ நடக்க உள்ளது.
இந்த திருவிழாவில், ‘ஹார்லி டேவிட்சன், பி.எம்.டபுள்யு., மோட்டோராட், கே.டி.எம்., ராயல் என்பீல்டு’ என பல பைக் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
இந்த திருவிழாவில் பங்கேற்க மும்பை, டில்லி, பெங்களூரு மற்றும் புனே ஆகிய இடங்களில் இருந்து கோவாவுக்கு, கே.டி.எம்., நிறுவனம், அதன் ஆரஞ்சு அணிவகுப்பை அனுப்புகிறது.
இந்த அணிவகுப்பில், கே.டி.எம்., பைக் வைத்திருப்பவர்கள் பங்கேற்க, சிறப்பு விலையில் ‘ஆரஞ்சு பாஸ்’ வழங்கப்பட இருப்பதாக கே.டி.எம்., நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக ‘கே.டி.எம்., இந்தியா’ செயலியின் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement