நடிகை மலாய்க்கா அரோரா கர்ப்பமா? – அர்ஜூன் கபூர் காட்டம்

இயக்குனர் மணிரத்னத்தின் 'உயிரே' படத்தில் இடம் பெற்ற 'தைய்ய தைய்யா' என்ற ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற நடிகை மலாய்க்கா அரோரா. பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டார். 19 ஆண்டுகள் கடந்த நிலையில் 2017ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அர்ஹான் (20) எனும் மகன் இருகிறார் .

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜூன் கபூரும் இவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தற்போது 49 வயதாகும் நடிகை மலாய்க்கா அரோராவும், அவரை விட 12 வயது இளையவரான நடிகர் அர்ஜூன் கபூரும் திருமணம் செய்ய போவதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மலாய்க்கா அரோரா தற்பொழுது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. மலைக்கா அரோரா கர்ப்பமா….எப்படி ….' என தொடர்ந்து பல தகவல்கள் பரவி வந்த நிலையில் இந்த தகவலிற்கு நடிகர் அர்ஜூன் கபூர் காட்டமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ‛‛கர்மா உங்களை சும்மா விடாது. நீங்கள் யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் இதுபோன்ற செயலின் விளைவுகளில் இருந்து உங்களால் தப்பிக்க முடியாது. எதை நாம் செய்கிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும். நீங்கள் செய்த செயலுக்கு இந்த உலகம் விரைவில் அதன் பலனை தரும்'' என காட்டமாக பதிவிட்டுள்ளார் அர்ஜூன்.

இதை பார்த்த ரசிகர்கள் 'அப்போ…. அது உண்மையில்லையா…..' என பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.