நாக்பூர், மஹாராஷ்டிரா அரசு மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவரை ‘ராகிங்’ செய்த ஆறு சீனியர் மாணவர்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா அதிருப்தி குழு – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவரை, சீனியர் மாணவர்கள் ஆறு பேர் ராகிங் செய்துள்ளனர். இதை பாதிக்கப்பட்ட மாணவர் ரகசியமாக மொபைல் போனில் ‘வீடியோ’ எடுத்துள்ளார்.
அவர், இந்த வீடியோவை கல்லுாரியின் ராகிங் தடுப்பு கமிட்டிக்கு அனுப்பி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, இதில் தொடர்புடைய ஆறு பயிற்சி டாக்டர்களை, கல்லூரி நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.
மேலும் கல்லுாரியின் ராகிங் தடுப்பு கமிட்டி சார்பில், ஆறு பேர் மீதும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement