86-வது நாளாக உஜ்ஜையினில் இருந்து மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார் ராகுல்காந்தி…!

உஜ்ஜியனி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை பாதயாத்திரை நடக்கிறது. கேரளம், கர்நாடகம், மராட்டியம் எனப் பயணித்து தற்போது மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில், மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’யின் போது தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒரு ஜோடி நாய்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றன. லிசோ மற்றும் ரெக்ஸி என்ற நாய்கள், “சலே கதம், ஜூட் வதன்” மற்றும் “நப்ரத் சோடோ, பாரத் ஜோடோ” என்ற செய்திகள் அடங்கிய பூங்கொத்துகளைக் கூடையாகப் பிடித்து காந்தியிடம் கொடுத்தன. இதனை பார்த்த ராகுல்காந்தி ஆச்சர்யம் அடைந்தார். ராகுல்காந்தி லிசோ மற்றும் ரெக்ஸியிடமிருந்து பூங்கொத்துகளை பெற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த ஒற்றுமை நடைப்பயணம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.