பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுப் புகார் – ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு வீடு ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முறைகேடு கண்டறியப்பட்டது எங்கு? உயர்நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன? இதுகுறித்து பார்க்கலாம்….
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் வெண்மான் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் சேக்ஸ்பியர். 15 வருடங்களாக சிங்கபூரில் டெக்னீசியன் வேலை பார்க்கும் இவர், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தபோது, வீடு கட்டும் திட்டத்தில் தங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மக்கள் பலர் கூறியுள்ளனர்.
இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஆர்‌.டி.ஐ மூலம் அனுமதி பெற்று பஞ்சாயத்து கணக்குகளை ஆய்வு செய்தார் சேக்ஸ்பியர். இதில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்து எந்த நடவடிக்கையும் இல்லாத பட்சத்தில், கடந்த 2013 – 2014 ஆம் ஆண்டு இந்திராகாந்தி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் (IAY) வீடு கொடுத்ததில், 1 நபருக்கு இரண்டு வீடுகளும், மேலும் சில தனிநபருக்கு 3 வீடுகள் வழங்கப்பட்டது. இதில் 13 நபர்களுக்கு வீடு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது.
image
2019 – 2020 ஆம் ஆண்டு (PMAY) பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளில் விதிமுறைகள் மீறி அரசு ஊழியர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. பட்டியலில் பெயர் இல்லாத நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டை எஸ்.ஈ.சி.சி. டேட்டாவில் உள்ள பெயரை மாற்றி வேற ஒரு பஞ்சாயத்தில் உள்ள நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று எஸ்.ஈ.சி.சி. டேட்டாவில் உள்ள 26 பயனாளிகளுக்கு வழங்காமல் பல்வேறு முறைகேடுகள் செய்து மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காந்திகுமார் தலைமையில் 2022 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 17 ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. தற்பொழுது சென்ற மாதம் 22 ஆம் தேதி வழக்கு முடிவு பெற்றதாகக் கூறப்படுகிறது. சேக்ஸ்பியர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வீடு பெறும் பயனாளிகளின் தகுதியை உறுதி செய்யவும், தகுதியில்லாதவர்களுக்கு வீடுகள் ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.