புதுச்சேரி: மதசார்பற்ற கூட்ட ணிக்கு காங்., தான் தலைமை தாங்கும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது;
புதுச்சேரி, உழவர்கரை நகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து தரம் பிரிப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 19 ஆண்டுகளுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்தவர்களுக்கு மீண்டும் 19 ஆண்டுகள் டெண்டர் விடுவதற்கு இதில் வழிமுறை செய்யப்பட்டிருக்கிறது.
அமைச்சர் சாய் சரவணகுமார், குப்பைக்கானடெண்டர் கோப்பு என்னிடம் வரவில்லை நான் அந்த கோப்பை பார்க்கவில்லை; கையெழுத்தும் போடவில்லை. எனது ஒப்புதல் இல்லாமல் டெண்டர் விடப்பட்டிருக்கிறது.
அந்த டெண் டர் கோப்புகளை என்னுடைய கவனத்திற்கு அனுப்ப வேண்டும் என, தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதிலிருந்து டெண்டர் விட்டதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது தெரிகிறது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நியமன விவகாரத்தில் முதல்வரின் கோரிக்கை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. புதுச்சேரி வழக்கறிஞர்களை நியமிக்காமல் வேறு மாநில வழக்கறிஞர்களை நியமனம் செய்துள்ளது.
புதுச்சேரியில் தகுதியான வழக்கறிஞர்கள் இல்லையா என்பதற்கு கவர்னர் பதில் சொல்ல வேண்டும். இது மாநில உரிமையை பறிக்கும் செயல்.
புதுச்சேரி மாநிலத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், நடத்தும் போராட்டங்களில் காங்., தான் தலைமை தாங்கும். காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் தனித்து போட்டியிடலாம் என சிலர், கருத்து தெரிவித்தனர். கட்சி தலைமை தான் இதற்கான முடிவு எடுக்கும்.

பிரசித்தி பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும். அரசாங்கத்தால் மட்டுமே அனுமதி பெற்று யானை வாங்க முடியும்.
யானை இறந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என நான் சொன்னதை, கவர்னர் அரசியல் செய்வதாக கூறுகிறார். கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியல் செய்ய வர வேண்டும்.
இவ்வாறு அவர், கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement