
திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமானவர் துரைமுருகன். இவரின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். கடந்த ஆண்டு இவர் காலமானார். இவரது மகள் பாரதி(55). இவர் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இருக்கும் லத்தேரியில் கணவர் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் பிள்ளையுடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் லத்தேரியில் ரயில்வே தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் பெண் சடலம் கிடப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிய வந்ததை அடுத்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்தப் பெண் பாரதி என்பதும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்திருக்கிறது .
குடும்ப பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அந்தப் பெண் பாரதி அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் என்பதும் தெரியவந்ததை அடுத்து வேலூர் மாவட்ட திமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.