NeuraLink சோதனையில் விலங்குகள் இறப்பு! சிக்கிய Elon musk!

உலகின் நம்பர் 1 பணக்காரராகள் உள்ள எலன் மஸ்க் பலரின் கண்களுக்கு எதிர்காலத்தை காப்பாற்றும் நபராக தெரிகிறார். இதற்கு காரணம் அவரின் அறிவுபூர்வமான யோசனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள்.

எதிர்காலத்தில் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கவேண்டும் என்று எலக்ட்ரிக் நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தை தொடங்கி EV வாகனங்களை விற்பனை செய்துவருகிறார்.

அமெரிக்காவில் கலிபோர்னியா, நெவாடா ஆகிய பாலைவனங்களில் சூரிய மின் உற்பத்தி செய்யும் Solar Panel மின் உற்பத்தி ஆலையை ஏக்கர் கணக்கில் நிறுவி மின் உற்பத்தி செய்து அரசுக்கு விற்பனை செய்கிறார்.

ஏன் மனிதர்கள் வீணாக்கும் பொருட்களை எல்லாம் பயன்படுத்தி செங்கல் ஒன்றை செய்து அதைவைத்து கட்டிடங்கள் எழுப்பி அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளார்.

வின்வெளி பயணத்திற்கு SpaceX எனும் நிறுவனத்தை தொடங்கி விண்வெளி சுற்றுலாவை துவக்கியுள்ளார். தற்போது மனிதர்களின் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க மூலையில் புதிய கருவி ஒன்றை புகுத்தி அதன் மூலம் மூளையின் திறனை அதிகரித்து பல புதிய கண்டுபிடிப்புகளை செய்ய முயற்சி செய்துவருகிறார்.

இதனால் தற்போது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக சோதனை செய்ய இதுவரை 1500 விலங்குகளை சோதனை செய்து அவை இருந்துள்ளதாக விலங்குகள் அமைப்பு ஒன்று எலன் மஸ்க் மீது அமெரிக்க அரசாங்கத்திடம் புகார் தெரிவித்துள்ளது.

விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை மீறினாரா மஸ்க்?

விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி நாம் எப்படி விலங்குகளை சோதனைக்கு பயன்படுத்தவேண்டும்? எந்தெந்த விலங்குகளை பயன்படுத்தவேண்டும்? எப்படி சோதனை செய்யவேண்டும்? என்பதற்கு விதிகள் உள்ளன.

ஆனால் இவை எல்லாம் மீறப்பட்டுள்ளதாக
Neuralink
நிறுவனத்தில் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியை விரைவுபடுத்த எலன் மஸ்க் தொடர்ந்து ஊழியர்களை வற்புறுத்தியதாகவும் அதனால் பல விலங்குகள் சோதனையில் இறந்ததாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1500 விலங்குகள் இறந்தன

இதுவரை சுமார் 1500க்கும் மேற்பட்ட விலங்குகள் இந்த ஆராய்ச்சியில் இறந்துள்ளதாக தெரிகிறது. இந்த ஆராய்ச்சிக்காக இதுவரை ஆடுகள், பன்றிகள், குரங்குகள் போன்ற விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்ற பல மருத்துவ நிறுவனங்கள் விலங்குகளை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தி பின்பு அவற்றை கொன்று சோதனை செய்யும். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் விலங்குகள் கொல்லப்படும் வேகம். ஆராய்ச்சியை விரைவுபடுத்த அதிக விலங்குகளை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அடுத்து என்ன நடக்கலாம்?

இந்த பிரச்னை காரணமாக இந்த ஆராய்ச்சியை மனிதர்கள் மீது செய்வதில் இன்னும் தாமதம் ஏற்படலாம். ஏற்கனவே மனிதர்கள் மீது சோதனை செய்வது வருடக்கணக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மனிதர்கள் மீது சோதனை செய்வதற்கு FDA அமைப்பிடம் விவரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். இது இன்னும் 6 மாதங்களில் நடைபெறும் என்று தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.