திடீரென்று அடிப்பான், கொன்றுவிடுவதாக மிரட்டினான்! அம்மாவின் குரல் எதிரொலித்தது.. கதறும் தமிழ்ப்பட நடிகை


தனது முன்னாள் காதலன் அடித்து உதைத்து துன்புறுத்தியதாக பிரபல நடிகை புளோரா சைனி மனம் திறந்துள்ளார்.

புளோரா சைனி

தமிழில் கஜேந்திரா, குஸ்தி, திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் புளோரா சைனி.

தமிழை தவிர இந்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் புளோரா நடித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஷ்ரதா வால்கரைப் போல தானும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார்.

புளோரா சைனி/Flora Saini

தனது முன்னாள் காதலன் குறித்து புளோரா கூறுகையில், ‘ஆரம்பத்தில் அவர் மிகவும் இனிமையாக இருந்தார். அவர் மிகவும் நல்லவர் என்று என் பெற்றோரும் ஏமாந்துவிட்டனர்.

ஷ்ரதா விடயத்திலும் அதுதான் நடந்தது. அவர் என்னை முதலில் என் குடும்பத்தில் இருந்து துண்டித்துவிட்டார். நானும் என் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்.

ஆனால் அவருடன் சென்ற ஒரு வாரத்தில் நான் அவமானப்படுத்தப்பட்டேன். அவன் ஏன் என்னை திடீரென்று அடிக்கிறான் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒருநாள் இரவு அவர் என்னை அடித்து உதைத்தார். எனது தாடை உடைந்தது. அவர் அன்றிரவு உன்னைக் கொன்று விடுவேன் என்று என்னை மிரட்டினார்.

அந்த நொடியில், எனது அம்மாவின் குரல் என் காதுகளில் எதிரொலித்தது, அத்தகைய தருணத்தில் நீங்கள் ஓட வேண்டும், ஆடை இருக்கிறதா இல்லையா என்று கூட நினைக்க வேண்டாம்.

உங்களிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் உயிரைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள். அப்படித்தான் நான் என் வீட்டிற்கு ஓடினேன், நான் திரும்பப் போவதில்லை என்று முடிவு செய்தேன்.

பின்னர் ஒரு வழியாக எனது காதலனுக்கு எதிராக புகார் அளித்தேன்’ என தெரிவித்துள்ளார்.   

புளோரா சைனி/Flora Saini

புளோரா சைனி/Flora Saini



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.