எங்களுக்கு பைத்தியம் இல்லை: அணு ஆயுத தாக்குதல் குறித்து புடின் வெளிப்படை


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் திட்டம் குறித்து கேட்கப்பட்டதற்கு “எங்களுக்கு பைத்தியம் பிடிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

ஆயுதங்கள் ஒரு தடுப்பு காரணி

உக்ரைன் உடனான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மனித உரிமை பேரவையின் உறுப்பினரிடம் தொலைக்காட்சி வழியாக உரையாடிய போது அணு ஆயுத பயன்பாடு குறித்து பதிலளித்தார்.

விளாடிமிர் புடின் உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும் என்ற கவலையைப் பற்றி கேட்டபோது, எங்களுக்கு பைத்தியம் பிடிக்கவில்லை, அணு ஆயுதங்கள் என்றால் என்ன என்பதை நாங்கள் முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம் என்று பதிலளித்தார்.

அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி புடின், “ஆயுதங்கள் ஒரு தடுப்பு, மோதலை அதிகரிக்க தூண்டும் காரணி அல்ல” என்று விவரித்தார், ஒருவேளை அமைதி வழிமுறைகள் தோற்றால், ரஷ்யா தனது நலன்களை பாதுகாக்க “எங்கள் வசம் உள்ள அனைத்து வழிகளையும்” பயன்படுத்தும் என்று மீண்டும் கடுமையாக வலியுறுத்தினார்.

Vladimir Putin & nuclear weapons-விளாடிமிர் புடின் & அணு ஆயுதங்கள்Vladimir Putin & nuclear weapons-விளாடிமிர் புடின் & அணு ஆயுதங்கள் (Reuters) 

புடினை தூண்டிய லிஸ் டிரஸ்

அணு ஆயுத பயன்பாடு குறித்து பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், முன்னாள் பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தன்னை சில திட்டங்கள் செய்ய தூண்டி விட்டதாக புதன்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் டோரி ஹஸ்டிங்ஸ் நிகழ்வில், தேவைப்பட்டால் WMD களைப் பயன்படுத்த தயார் என கூறியதை குறிப்பிட்டு புடின் இந்த கருத்து அமைந்தது.

மேலும் பிரித்தானிய பிரதமரின் இந்த கருத்துக்கு பிறகு நான் பதிலுக்கு சில விஷயங்களை வலியுறுத்த வேண்டியிருந்தது என்று ஜனாதிபதி புடின் குறிப்பிட்டார்.

Vladimir Putin & nuclear weapons-விளாடிமிர் புடின் & அணு ஆயுதங்கள்Vladimir Putin & nuclear weapons-விளாடிமிர் புடின் & அணு ஆயுதங்கள் (Getty)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.