சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார்.

சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடைபெறப்பட்டு தினசரி சராசரியாக 60,000 முதல் 70,000 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சபரிமலையில் நடந்த சிறப்பு பெற்ற தீபாராதனை நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த அமைச்சருக்கு  ஐயப்பன் விக்கிரகத்தில் பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: ”இந்த ஒரு விஷயத்தை மனதில் வைத்துதான் பாஜக குஜராத்தில் வேலை செய்தது!” – ஓர் அலசல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.