பொதுவாக இன்றைய காலத்தில் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க பலர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆனால் பலருக்கு வாரத்திற்கு எத்தனை உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பது பற்றி கேள்விகுறியாக இருக்கும்.
உண்மையில் வாரத்திற்கு எத்தனை நாட்கள் உடற்பயிற்சி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
ஒரு வாரத்தில் எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
- விரைவாக அதிக தீவிர இடைவெளி பயிற்சி எனப்படும் HIIT-யில் 15 நிமிடங்கள் ஈடுபடலாம்.
- ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வாக்கிங் அல்லது ஜாகிங் செய்வது கூட உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் உதவும்.
- ஆரோக்கியமாக இருக்க 2 நாட்கள் வலிமை பயிற்சியும் (strength training ), 2 நாட்கள் கார்டியோவும் (cardio) செய்வது போதுமானது.
- உடல் எடையை குறைக்க துவக்கத்தில் நாளொன்றுக்கு சீரான இடைவெளியில் 3 முறை வரை ஒர்க் அவுட்களில் ஈடுபடலாம். ஒரு மாதத்திற்குப் பின் இதை 5 முறை ஆக்கலாம்.
- . தீவிர உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் என்றால் வாரத்திற்கு சராசரியாக 150 நிமிடங்கள், மிதமான உடற்பயிற்சி என்றால் வாரத்திற்கு 300 நிமிடங்கள் ஒர்கவுட்களில் ஈடுபடலாம்.
- உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தசைகளை கட்டமைப்பது உங்கள் நோக்கம் என்றால் வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் ஒர்க் அவுட்கள் செய்வது போதுமானது.
- உளி போன்றதொரு உடற்கட்டை பெற விரும்பினால் தினமும் 40 முதல் 50 நிமிடங்கள், வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் வரை இதற்கான ஒர்க் அவுட்களில் ஈடுபட்டால் போதும்.