பாங்காக் : தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதால் இங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு, மியான்மர் எல்லையில் பாங் மாவட்டத்தின் சியாங்மை வனப்பகுதியில், போதைப் பொருள் கடத்தல் கும்பல் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்கள் சோதனை நடத்தினர். அப்போது, தப்பி ஓடிய கும்பல் மீது, வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த வேட்டையில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் தரப்பில் இழப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள உயரதிகாரிகள், சம்பவ இடத்தில் இருந்து 29 பாக்கெட்டுகளில் ‘மெத்தம்பீடாமைன்’ எனப்படும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement