மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் தீவிரப் புயலாக உருவான ‘மாண்டஸ்’ தற்போது புயலாக வலுவிழந்து, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல், மாமல்லபுரத்தில் இன்று இரவு 11:30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளையும் தமிழகத்தில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி VI) பதவி நியமனத்திற்கான தேர்வு நாளை நடைபெறவிருந்தது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.